March 17, 2018

ஒரு காதல் வந்துச்சோ ( நாடகம் - பகுதி 5 )
(சலசலத்து ஓய்ந்த மழை போல் கூட்டம் கலைந்து கொண்டிருந்தது.
வினோத் சுசீலாவின் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தப் படுகிறான்.)

சுசீலா: வினோத், மீட் நவீன் காலேஜ் மேட்ஸ்.

வினோத்: அது சரி.. நவீன் யாரு?

சுசீலா(அசடு வழிந்தபடி): ஐ மெண்ட் கதிர் காலேஜ் மேட்ஸ்.

(இதை நவீன் கவனித்து விட, ஜீரோ வாட்ஸ் பல்பாய் தொங்கியிருந்த அவன் முகம், ஆயிரம் வாட் பல்பாய் ப்ரகாசிக்கிறது.)

வினோத்: எல்லாருக்கும் பாராட்டுக்கள். நிகழ்ச்சிகளும் ரொம்ப அருமையா இருந்தது.

தாமரை: தாங்க்ஸ் வினோத். நீங்க என்ன பண்றீங்க?

வினோத்: பீ.ஈ முடிச்சிட்டு, 'டி.ஈ.' கம்பனில வேலை பண்றேன். ஸ்டைன்லஸ் ஸ்டீல் ராட்ஸ் தயாரிக்கறோம். கேள்விப்பட்டிருப்பீங்களே, கம்பனி பத்தி..

தாமரை: இல்லையே!

வினோத்(கனைத்தபடி): அது தவிர, ட்யூஷன் சொல்லித் தரேன். மாத்ஸ் ட்யூஷன். நீங்க கூட வேணுனா ஜாயின் பண்ணிக்கலாம்.

தாமரை(சிரிப்பை மறைத்தபடி): இல்லை தாங்க்ஸ். நான் பி.ஏ லிட்டரேச்சர் பண்றேன்.

வினோத்: அதுல கூட சந்தேகம்னா வரலாமே. குறிப்பா ஷேக்ஸ்பியரோட plays பத்தி எதாச்சும் டவுட்டுன்னா...

(ரத்னா வருகிறாள்)

ரத்னா: நானும் லிட்டரேச்சர் தான். எனக்கு ட்யூஷன் உண்டா?

வினோத்(உற்சாகத்துடன்): ஓ கட்டாயமா. உங்களுக்கு இல்லாமையா?

சுசீலா(காதருகில்): ரொம்ப வழியாதடா. தொடச்சிக்க.

ரத்னா: ப்ரோக்ராம்ஸ் ரொம்ப நல்லா இருந்திச்சு...உங்களையெல்லாம்
பாராட்டிட்டு போலாம்னு வந்தேன்.

விஜி: தாங்க் யூ ரத்னா. நீங்க எல்லாரும் அமைதியா கோ-ஓபரேட் பண்ணுவீங்கன்னு
நாங்களே நினைக்கலை.

ரத்னா: நான் ஒரு சஜெஷன் குடுக்கலாம்னு இருந்தேன். அடுத்த வருடத்திலெருந்து எல்லாரும் சேர்ந்தே செய்யலாம். எல்லார் கிட்டையும் திறமை இருக்கு, நேரத்தை அதிகமாக்கி ரெண்டு மணி நேர வெரைட்டி எண்டர்டைன்மென்ட் பண்ணலாம். என்ன சொல்றீங்க?

கதிர்: கண்டிப்பா.

(ரத்னா பொதுவாய் புன்னகைத்து விடை பெறுகிறாள்.)

வினோத்: அடுத்த வருடம் ட்ராமா போட்டா, நான் துஷ்யந்தன்... ரத்னாவை சகுந்தலாவா நடிக்கச் சொல்லலாமா? இந்தக் காம்பினேஷன் ரொம்ப வர்க் ஒவுட் ஆகுது.

நவீன்: ரத்னா சகுந்தலான்னா, நான் கூட மறுபடியும் துஷ்யந்தனாக நடிக்கத் தயார்.

( உப்பிய பூரி போல் மலர்ந்திருந்த சுசீலா முகம் லேசாய் சுருங்குகிறது.)

வினோத்: சரி நான் அப்ப கிளம்பறேன். சுசீ நீயும் சுருக்க வந்திடு.

சுசீலா: நீங்க எல்லாரும் இல்லைன்னா இது சக்ஸஸ் ஆகிருக்காது. ரொம்ப நன்றி...ok folks... நேரமாகுது கிளம்பறேன்  குப்பு வேற ·போன் பண்ணுவான்.

நவீன்: யாரு குப்பு?

சுசீலா(அலட்சியமாக): என்னோட ஃபியான்ஸ்!

(எல்லோரும் அடுத்தடுத்து கிளம்புகிறார்கள்.)

கதிர் (நவீனிடம்): நான் உன்னை ட்ராப் பண்ணவா?

நவீன்: நோ ப்ராப்ளம். I will take a cab. வெரி எஞ்சாயபிள் டைம். ஆனா இன்னொரு முறை நாடகம்ன்னா என்னைக் கூப்டாத. விக் ஒட்டி எடுக்குறதே பெரும்பாடா போச்சு. (நெஞ்சை நிமிர்த்தியபடி) ஒண்ணு வாடகைக் கடைய மாத்து, இல்லை என்னை மாதிரி கலைஞனை இழக்க வேண்டிவரும்.

கதிர்: இவன் பெரிய சிவாஜி. போடா! இந்த நவீன் இல்லைன்னா ஒரு 'பவீன்' நடிச்சுட்டு போறான்.

நவீன்: செ! நன்றிகெட்ட உலகம். காலைல சூரிய நமஸ்காரம் மாதிரி பண்ணி கால்ல கூட விழுந்த!

('யாரை நம்பி நான் பொறந்தேன்' என்று பாடத் துவங்குகிறான்.)

( நிதின் காதை இறுக்க பொத்திக் கொள்கிறான்)

March 16, 2018

ஒரு காதல் வந்துச்சோ ( நாடகம் - பகுதி 4 )(இடம்: ஒப்பனை அறை)

கதிர் (மெட்டுடன் முணுமுணுக்கிறான்):

"சகுந்தலம் என்ற காவியமோ
ஒரு தோகையின் வரலாறு...."


(நவீன் இளித்தபடி நிற்கிறான்)

குமார்: கிராம்ஃபோன் கால பாட்டெல்லாம் இப்ப ரொம்ப முக்கியமா

சுசீலா: பெருமாளே! இதை எப்படியாவது கழட்ட வழி பண்ணு. நான் உண்டியல்ல ஒரு ரூபாய் போடறேன்.

தாமரை: இங்க நாங்க கஷ்டப்படடிட்டிருக்கோம். பெருமாளுக்கு பைசாவா? அதுவும் ஒரு ரூபாய். ரொம்ப தாராள மனசுடீ உனக்கு.

கதிர்: நான் ஒரு ஐடியா தரவா?

நவீன்: சொல்லித் தொலை

கதிர்(அகலமாக கண் விரித்து) : சவுரிய குட்டியா வெட்டி விட்டுட்டு, துஷ்யந்தன் திரும்ப வர சகுந்தலா மாரியம்மனுக்கு முடி  நேர்ந்துகிட்டதா கதைய மாத்திட்டா?


( எல்லோரும் சுட்டெரிப்பது போல் கதிரையே முறைக்க, தன் அபார புத்தியின் அருமை தெரியாத ஜன்மங்களிடம் என்ன பேச்சு என வேறு பழைய பாட்டை முணுமுணுக்க தொடங்கினான்)


சுசீலா: இது எங்க பாட்டியோட நிஜமுடில செஞ்ச சவுரி, அம்மாவுக்கு தெரிஞ்சா கொன்னே போட்ருவாங்க

(சரியாக மூன்று நிமிடத்தில் சவுரியை வங்கியிலிருந்து கிட்டத்தட்ட பிடிங்கி எடுத்தனர்.  நவீன் அவசர அவசரமாய் மேடையேறுகிறான். படபடப்பில் சுசீலாவுக்கு அடுத்த வசனம் மறந்ததால், ஸ்க்ரிப்டை வேகமாகப் படித்து விட்டு ஒடுகிறாள்)

விஜி: பார்த்து...நிதானமா ஓடுடீ. சவுரியே இப்பவோ அப்பவோனு இருக்கு, வேகமா ஓடி கீழ விழுந்தடப் போகுது.

( ஒரு வழியாக நாடகம் முடிய, குமார் , ஏணி வழியாய் ஏறி, வாங்கியிருந்த உதிரிப்பூக்களை நடு மேடையைப் பார்த்து எறிகிறான். பலத்த கரகோஷம் எழும்புகிறது.)


தாமரை(குஷியாய்): அப்பாடி! என்ன கிளாப்!!

விஜி: நாடகத்துக்கு தானே? இல்லை நிறுத்தினதுக்கா!

(பார்வையாளர் பகுதியில்)

சபேசன்: இப்போ சுசீலாவைப் பார்த்தா தேவதை மாதிரி இல்ல...

வினோத்(நெகிழ்ந்து): என் தங்கை என்னிக்கு தேவதைக்கு குறைச்சல்

(அடுத்து இன்டெராக்டிவ் கேம் தொடங்குகிறது.)

(விஜியும் கதிரும் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.)

(முதல் சீட்டை பிரித்து பார்வையாளர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து பேச அழைக்கின்றனர்.)

மேடையேறிய பார்வையாளர்: முதல் க்ளூ.. இவர் ஆந்தை மாதிரிங்க

கீழிருந்து ஒரு குரல்: அம்மா முன்னாடி முழிக்கிற ஓ.பன்னீர்செல்வம்!!!

மேடையேறியவர்: இல்லை... இரண்டாவது க்ளூ... பகலில் தூங்குபவர்.

கீழே: ஸ்கூல்ல தூங்கற என் பையனோ? ஆந்தை மாதிரி முழிக்கறது கூட பொருந்தி வருதே.....அவ்வளவு famous ஆகிட்டானா அவன்?


மேடை : இன்னுமா யாருக்கும் தெரில?... நம் காவல் தெய்வம்.

கீழ்: எம்.ஜி.ஆர்!!!!

மே.பா: அய்யோ! நம்ம காலனி வாட்ச்மான்!

(ஓ என்ற பேரிரைச்சல் காதை பிளக்கிறது)

(அடுத்து ஒருவரை தேர்ந்தெடுத்து ஆட்டம் தொடர்கிறது.)

மே.பா: முதல் க்ளூ... இதிஹாஸ பாத்திரம்

(மேடையின் பக்கவாட்டில் நிகழ்ச்சி பார்த்தபடி..)

தாமரை: எங்க வீட்டு ஈயப்பாத்திரமே அதுக்குள்ள இளிக்குது. இதிஹாசப் பாத்திரமெல்லாம் உளுத்துப் போயிருக்காதோ?

சுசீலா: நீங்க ரெண்டு பேரும் கெஸ் பண்ணுங்க

தாமரை: உனக்கு மட்டும் எப்படி தெரியும்.

சுசீலா: சிட்ல பேர் எழுதி போட்டதே நான் தான்.

நவீன்: தெரிலை. நீயே சொல்லேன் சூசீ.....

சுசீலா: எங்க அம்மா எனக்கு பழைய பேரா இருந்தாலும் நல்ல பேரா சுசீலான்னு வெச்சுருக்காங்க. அதை சூசீ..னு மாத்தி, க்ருத்துவ மதத்துக்கு  நீயே எக்ஸ்போர்ட் பண்ணிடாத.


நவீன்: சரி க்ளூ குடு, யாரு இதிஹாஸ பாத்திரம்

சுசீலா: அவர் ஒரு பறவை

நவீன்: பறவை முனியம்மா !!

தாமரை ( நற நறவென பல்லைக் கடிக்கிறாள்) : இத்த்திஹாஸ பாத்திரம்

நவீன்: இவ்வளவு அழுத்தி சொன்னா, பாத்திரம் நசுங்கிடும்.

சுசீலா(சிரிக்கிறாள்): ஐயோடா... நவீன். எப்படி உன்னல இப்டி டக்டக்ன்னு கௌன்டர் குடுக்க முடியுது

(தாமரை தலையில் அடித்துக் கொள்கிறாள்)

தாமரை(நவீனிடம் ரகசியமாய்): நீ இம்ப்ரேஸ் பண்ணுற லட்சணத்துகாக இப்படி தாங்க முடியாத ப்ளேட போட்டு எங்கள கொல்லாத.

சுசீலா: த ஆன்ஸர் இஸ் ஜடாயு.

நவீன்(சோகமாக): அப்போ நான் ஃபெயில் ஆய்ட்டேனா?

சுசீலா(சூள் கொட்டியபடி): நீ தேறாத கேஸ். பாஸ் பண்ணறது ரொம்ம்ப கஷ்டம். அடுத்த கேள்வி போலாமா?

நவீன்: நான் ரெடி

சுசீலா: முதல் க்ளூ.... அமெரிக்கப் பெண்மணி

நவீன்: கிரிஸ்டினா ஆகீலேரா

( தாமரை...ஆமா... இந்த பில்ட்-அப் தான் இப்ப பாக்கி என்று முணுமுணுக்கிறாள்)

சுசீலா: இல்ல... பில் க்ளிண்டன் என்றதும் நினைவுக்கு வருபவர்?

நவீன்: ஆ....யெஸ் தெரியும்.....மோனிகா!

சுசீலா(உதட்டைச் சுழித்தபடி): தப்பு! ஹிலரி க்ளிண்டன். பில் க்ளிண்டன் என்றதும் மோனிகா தான் நினைவுக்கு வராங்களா?  ம்ஹீம்... நீ பாஸ் பண்ண மாட்ட.


நவீன்: இன்னொரு கேள்வி. இப்ப கண்டிப்பா சரியான ஆன்ஸர் சொல்லுவேன் பாரு.

சுசீலா: நான் கூட உன்ன என்னவோன்னு நினைச்சேன்...ம்ஹூம். டைம் வேஸ்ட்.

( நவீன் முகம் 99 ல் ரன்-அவுட் ஆன பாட்ஸ்மேன் போல் சுருங்கிப் போகிறது )

குமார்: யப்பா! நாங்க இருக்கவா வேணாமா?

நவீன்(எக்கச்சக்க எரிச்சலில்): ஏன்? இரேன்! இங்க என்ன மிட்நைட் மசாலாவா நடக்குது?

விஜி (அவசரமாய் ஓடிவந்தபடி): எல்லாரும் ஃபார்மல் தாங்க்ஸ் சொல்ல வாங்க, மசாலா ரெசிபியெல்லம் அப்புறம் பேசலாம்.

தாமரை: விஜி, அரைகுறையா காதில் வாங்கி எதையானும் உளறாத.

(மேடையில் எல்லோரையும் அறிமுகப் படுத்தி நன்றியுரையும் வழங்குகிறான் கதிர்)

(பார்வையாளர் பகுதியில்..)

சபேசன்: பரவாயில்லை துஷ்யந்தன் பார்க்க நல்ல பையனாத்தான் இருக்கான்

(மங்களம் கண்டுகொள்ளாமல் மௌனமாய் இருக்க்கிறாள்.)

ஒரு காதல் வந்துச்சோ ( நாடகம் - பகுதி 3 )காட்சி 4


இடம் 'ஏ' ப்ளாக் கம்யூனிடி ஹால். 


(அடுத்த இரு வாரங்கள் தீவிர ஒத்திகை.)

சுசீலா : இன்டெராக்டிவ் கேமுக்கு ஐடியா குடுங்க

விஜி: பார்வையாளர்கள குலுக்கல் முறையில கூப்பிட்டு, மேட் ஃபார் ஈச் அதர் வெக்கலாம்.

நவீன்(சிரித்துக்கொண்டு): ஹா.... அது ரொம்ப ரிஸ்க்கான விஷயம்

விஜி: அங்க இருகற தம்பதிகள சொன்னேன். அய்ய... ரொம்ப ஜோக் அடிச்சதா நினைப்பு.

குமார்: டேய் நவீன் அடங்கவே மாட்டியா நீ...அதெல்லாம் போர் விஜி. வேற ஏதாச்சும்....

கதிர்: பிரபலங்கள் பேரை குலுக்கி போட்டு, யார் பேரு வருதோ,  அவங்களைப் பத்தி ஒரு participant பேசணும். அதை வச்சு மத்தவங்க அது யாருன்னு கண்டு புடிக்கணம்.

சுசீலா: wow, தட் சௌண்ட்ஸ் குட் கதிர்.

நவீன்: இது எங்க பாட்டி காலத்துல விளையாடுவாங்களாம்

கதிர்: எல்லாம் அப்டிதான்....பழைய மோர்களிய கிண்டி மேல கொத்தமல்லி தழை தூவி, இந்தப்பாரு எங்கூரு Dholka னு சொல்றது தான் இப்ப ட்ரெண்டு.

விஜி: ட்ராமா ரிஹெர்ஸல் எந்த அளவுல இருக்கு...அது ஒரு டைம் ப்ராக்டீஸ் பாத்துடலாம்.

நவின்(கடுப்புடன்): ரிஹர்சல் இருகட்டும். இந்த காஸ்ட்யூம் எங்க வாங்கறீங்க. 'விக்' எல்லாம் அரதப் பழசா இருக்கு. சகிக்கல. நானே ஷாம்பூ போட்டு, அலசிக் குடுத்துட போறேன்.


சுசீலா: ஆ...மா இங்க லோகல் ட்ராமாவுக்கு பக்கத்து கடை காஸ்ட்யூம் போதும். இதுக்காக ஏ.வி.எம் போக முடியுமா? எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணுங்க

குமார்: பாத்துடா பாதி டிராமால தும்மித் தொலைக்காத.


(ஒத்திகையில் மூழ்குகிறார்கள்..)காட்சி 5

நேரம் எழு மணி. இடம்: ஏபிசி காலனி.

[ ஊரெங்கும் தீபாவளி ஜகஜோதியாய் ஜொலித்துக்கொண்டிருக்கிறது. நடுநாயகமாய் ஒரு ஷாமினா போட்டு, அதன் அருகில் சுமார்  முன்னூறு முதல் ஐநூறு தலைகள்  நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்கள். ஒப்பனை அறை' என்ற பெயரில் ஒரு சின்ன தடுப்பு]

[ தடுப்புக்கு பின், குறுக்கும் நெடுக்குமாக கதிர், எள்ளும் கொள்ளும் வெடிக்க கோவமாக நடந்து கொண்டிருந்தான். ]

கதிர்: ஏய் நவீன், வாடா. என்ன பண்ணிட்டுருக்க? நேரம் ஆகுதுன்னு ஜனங்க கூச்சல் போடறாங்க பாரு.

நவீன்: மீசை ஒட்ட மாட்டேங்குது, அந்த பாழாப்போன தடித்தாண்டவராயன் கடையில வாங்க வேணாம்னு சொன்னா யாரு கேட்டீங்க. இப்போ பாரு, ஒட்ட மாட்டேங்குது.


கதிர்: தடித்தாண்டவராயன் கடையா? நான் 'ரமணி & கோ'ன்னு இல்லை நினைச்சிட்டு இருக்கேன்.

நவீன்: இப்படி டைமிங்க் இல்லாம மொக்க போட்டா, அப்புறம் நீயாச்சு உன் நாடகமாச்சுன்னு விட்டுட்டுப் போய்டுவேன்.

(நவீன் முன்னால் தடாலென விழுந்து காலையில் தப்பும் தவறுமாக செய்த சூரிய நமஸ்காரத்தை செய்கிறான்)

கதிர்: நவீன், நான் கப்னு வாய பொத்திக்கறேன், மீசையை ஒட்டிட்டு சட்டுபுட்டுன்னு வந்துடு.

[ திரை விலக, அவசரத்துக்கு கிடைத்த ஃபெவிகுவிக்-ல் மீசையை ஒட்டிக் கொண்டு துஷ்யந்தன் மேடையில் குதிக்கிறான். ]

நவீன்: சகுந்தலா என்னை உன்னிடம் கட்டிப்போடும் இந்தக் கருநீண்ட கூந்தலின் ரகசியம் என்ன? [ கூந்தலை மெதுவாய் தொடுகிறான் ]

[ அவள் நகர எத்தனிக்க, கருநீள சவுரி துஷ்யந்தன் அணிந்திருந்த வங்கியில் மாட்டிக்கொள்கிறது.  அவிழ்ந்து விடுமோ என்ற பயத்தில் சகுந்தலா அப்படியே நிற்க, துஷ்யந்தன் சமாளிக்கிறான். ]


சுசீலா(ரகசியமாய்): இப்போதிக்கு கட்டிப்போட்டிருக்கும் ரகசியம், வங்கில 'சவுரி முடி

(இரண்டு பேரும் வசனம் பேசிக்கொண்டே மேடையை விட்டு தத்தித் தத்தி குதித்தோடி விடுகிறார்கள் )

(பார்வையாளர் வரிசையில் சபேசன்-மங்களம் முகத்தில் ஈயாடவில்லை.)

சபேசன்: நம்ம பொண்ணு பரவாயில்லை நல்லா நடிக்கறா.

மங்களம்(வருத்ததுடன்): ஏங்க...யாருங்க துஷ்யந்தனா நடிக்கறது? எங்க அண்ணனோ, அவன் மகன் குப்புவோ இதப் பார்த்திட்டா கல்யாணத்துக்கு சம்மதிக்கவே மாட்டாங்க.


சபேசன்: அட பைத்தியமே. அதான் அவளே குப்பு பப்புவெல்லாம் வேணாம்னு சொல்லிட்டளே. ஆனாலும் என் பொண்ணு  அதிபுத்திசாலி, உங்க வீட்டு சொந்தம்ன்னு சொன்னவுடன் வேணாம்னுட்டா பாரு.


[ மங்களத்தின் முகம், ஏடாகூடமாக கேள்வி கேட்ட டி.வி தொகுப்பாளரிடம் மாட்டிக்கொண்ட இதயத்தெய்வம் அம்மாவைப் போல் கோபத்தில் சீறுகிறது ]


மங்களம்: உங்க அக்கா பையன், பாச்சாவுக்கு இது தேவலை. என்ன பேரோ, பாச்சா தோச்சானிட்டு. வினோத்: அடடா! உங்க சண்டையை வீட்ல வந்து வெச்சுக்கோங்க. இங்க வந்து நொயி நொயின்னு. எனக்கு வசனமே காதுல விழல.

சபேசன்: எனக்கு சுசீய சகுந்தலாவா பார்த்த பிறகு காதே பஞ்சடைச்சு போச்சு, வசனம் காதுல விழவே இல்லடா

( பாகம் 3 முற்றிற்று)

March 12, 2018

ஒரு காதல் வந்துச்சோ ( நாடகம் - பகுதி 2)
காட்சி 2

(சுசீலாவும் விஜியும் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருக்கின்றனர்.)

விஜி: சுசீ, உன்ன எங்கெல்லாம் தேடுறது? கதிர் காலைல கால் பண்ணான். அவனோட இன்னும் நாலு பேர் தயாரா இருக்காங்க, ட்ராமா, கலை நிகழ்ச்சிகளில நடிச்சு பழக்கமாம். அதனால பின்னிடுவாங்களாம்.

சுசீலா: ஜனங்க நம்மள பின்னாம இருந்தா சரி. ரத்னாக்கு கொழுப்பு அதிகம்! போன காலனி ப்ரொக்ராம்ல அவங்கெல்லாம் ரொம்ப அற்புதமா கிழிச்சிட்டாங்களாம், நம்ம டான்ஸ் ரொம்ப சுமார்னு பேசிட்டா

விஜி: இந்த முறை நாம ப்ரூவ் பண்ணி காமிக்கணம்.

சுசீலா: கதிரையும் அவன் க்ரூபையும், நம்ம ப்ளாக் கீழ இருக்கற கம்யூனிடி ஹாலுக்கு ஈவினிங் வர சொல்லிடு. நான் சில ப்ளான் வெச்சிருக்கேன்.

விஜி: ஒகே, சீயூ, பை.


காட்சி 3


(இடம்: ஏபிசி காலினி கம்யூனிடி ஹால்.


விஜி, கதிர் தவிர, கதிரின் நண்பர்களான குமார், தாமரை, நவீன் ஆகியோர். சுசீலா நுழைகிறாள்)

கதிர்: ஹாய் சுசீலா, எங்களை முதல்ல வரச் சொல்லிட்டு நீ லேட்டா வந்தா எப்படி?

சுசீலா: ஹி ஹி...சாரி. அம்மா அப்பா வெளிய போயிருக்காங்க, அதான் வீட்ல கொஞ்சம் வேல

விஜி: நான் கல்சரல் கமிட்டி கிட்ட கதிர் ஃப்ரெண்ட்ஸுக்கு பர்மிஷன் வாங்கிட்டேன். பை த வே, மீட் குமார், தாமரை அண்ட் நவீன்.

(கை குலுக்குகிறார்கள்)

சுசீலா: சாரி ரொம்ப வெயிட் பண்ண வெச்சுட்டேன். நமக்கு குடுத்திருக்கற டைம் ஒரு மணி நேரம். அதை இப்படி பிரிச்சிருக்கேன்.

(ஒரு காகிதம் எடுத்து விளக்குகிறாள்.)

^^^^^^^^^^^^^^^

20 நிமிஷம் = நாடகம்
7 நிமிஷம் = குட்டிப்பசங்க டான்ஸ்
15 நிமிடம் = இன்டெராக்டிவ் கேம்
5 நிமிடம் = இடையிடையே தீபாவளி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்
8 நிமிஷம் = மிஸ்ஸெல்லேனியஸ், அதாவது
நன்றியுரை, துவக்க உரை, எல்லாத்துக்கும்

^^^^^^^^^^^^^^^^

சுசீலா: நீங்கல்லாம் சொல்லுங்க. ஒரு மணி நேரத்துல என்ன செய்யலாம்? வேற பெட்டர் ஓப்ஷன்ஸ்?.

(ஒவ்வொருவரும் அவரவர் கருத்தை முன்வைக்கின்றனர்)

(யார் எப்படி பேசினாலும் நவீன், பாரபட்சமின்றி ஓரக் கண்ணாலும் நடுக்கண்ணாலும் அப்பட்டமாக சுசீலாவை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறான்)

சுசீலா:   நவீன் உங்க சஜேஷன்ஸ்

நவீன்: ஒரு மணி நேரத்துல என்னவெல்லாமோ செய்யலாங்க. அது நம்ம குறிக்கோள பொறுத்தது

சுசீலா:  இப்ப என்ன சொல்ல வரீங்க?

கதிர்: சுசீ.. அவன் அப்படித்தான், ஹீ இஸ் க்ரேஸி. சட்டுபுட்டுன்னு முடிவு பண்ணுங்க. ரிஹர்சலுக்கே நேரம் கம்மி.

சுசீலா:  ட்ராமா ஓகேன்னா ஸ்க்ரிட் ரெடி பண்ணணும்

தாமரை:  எங்க கிட்ட காலேஜ் ட்ராமாவோட ரெடி-ஸ்கிரிப்ட் ஒண்ணு இருக்கு.
'நவீன-சகுந்தலா'. நம்ம நவீன் தான் துஷ்யந்தன் வேஷம். சகுந்தலா வேடம் போட்ட பொண்ணு தான் இங்க இல்ல.

நவீன் (முகத்தை படு சீரியசாக வைத்துக் கொண்டு): சுசீலா நீங்களே நவீன சுசீலாவா இருங்களேன்

(சுசீலா குழப்பத்துடன் பார்க்க)

நவீன்: ஐ மீன், நீங்களே நவீன சகுந்தலாவா நடிக்கறீங்களான்னு கேட்டேன்.

குமார்: ஜஸ்டு மிஸ்! நல்லா வருவடா நவீன் நீ

விஜி: சுசீ நல்லா நடிப்பா, போன வருட காலேஜ் ட்ராமல கூட கலக்கோ கலக்குன்னு கலக்கி, சிறந்த துணை நடிகை கப் வாங்கினான்னா பாத்துக்கோங்க

நவீன்: என்ன வேஷம்?

விஜி: 'ராஜா வாழ்க!'ன்னு கோஷம் போடற பொதுஜனத்துல ஒருத்தி. ஆனா அந்த ட்ராமால மொத்தமே நாலு பேரு தான்.

சுசீலா (கடுப்பாக) : விஜி, நீ யார் கட்சின்னு முதல்லயே சொல்லிடு.

கதிர்: அப்ப தைரியமா நடிங்க. காலனி ட்ராமா தானே. ஒரு வேளை முட்டையோ தக்காளியோ முகத்துல அடிச்சாங்கன்னா, ப்யூட்டி பார்லர் போய் ஃபேஷ'யல் பண்ற செலவு மிச்சம். ஆனா அப்படியெல்லாம் பண்ண மாட்டாங்க. அல்லாரும் நம்ம குடும்பம் மாதிரி.

சுசீலா: உங்களுக்கெல்லாம் என்னையப் பார்த்தா கிண்டலா போச்சு. இந்த ஒரு காரணத்துக்காகவே நான் சகுந்தலாவா நடிச்சு காமிக்கறேன்.

நவீன்(புன்னகைக்கிறான்): ஆர் யூ ஷ்யூர்?

சுசீலா: அஃப்கோர்ஸ்

நவீன்: இல்ல.. வேற எந்த காரணமும் இல்லையான்னு கேட்டேன்.

சுசீலா: வேற என்ன காரணம் இருந்தா, உங்கள மாதிரி சகிக்க முடியாத துஷ்யந்தனுக்கு சகுந்தலாவா நடிக்க ஒத்துட்டிருப்பேன்.
எல்லாம் விதி தான்.

நவீன்: டைலாக் சரியா சொல்ல வருமா? உங்க செல் நம்பர் குடுத்துட்டுப் போங்க, டவுட்டு இருந்தா என்கிட்ட கேக்கலாமே

கதிர்: ட்ராமவ தவிர வேற மத்ததெல்லாம் நடக்குது இங்க

(ஒத்திகைக்கு நேரம் குறித்த பின், எல்லோரும் கலைந்து அவரவர் வீடு செல்கின்றனர்)

லலிதா சஹஸ்ரநாமம் ( 233-240) ( With English Meanings)சகுண உபாசனை

மஹா காமேஷ மஹிஷீ;
மஹா த்ரிபுர சுந்தரீ;
சது: ஷஷ்ட்யுப சா-ஆராத்யா;
சது: ஷஷ்டி கலா மயீ;
மஹா சது: ஷஷ்டி கோடி யோகினீ கணசேவிதா;
மனு வித்யா;
சந்த்ர வித்யா;
சந்த்ர மண்டல மத்யகா;

() மஹிஷீ = பட்டத்து மஹிஷீ - முதன்மை ராணி

#233 மஹா காமேஷ மஹிஷீ = மஹா காமேஷ்வரனின் ராணியாகப்பட்டவள்

() த்ரிபுரா = புரம் என்றால் நகரம் - பட்டணம். திரிபுரம் மூப்பெரும் நகரங்களைக் குறிக்கிறது. (ஸ்தூல, சூக்ஷும காரணங்களாலான மூவுலகங்கள் என்றும் பொருளுணரலாம்.)

#234 மஹா த்ரிபுர சுந்தரீ = மூவுலகிலும் அதி சௌந்தர்யத்துடன் சுந்தரியாக திகழ்பவள்

() ஷஷ்டி = அறுபது 
சது: சஷ்டி = அறுபத்தி நாலு
உபசார = உபசரிப்பு -  சேவை சாதித்தல் -  ஆபரண அலங்காரங்கள்
ஆராத்யா = வணங்குதல்

#235 சது: சஷ்ட்-யுபசாராத்யா = அறுபத்தி நான்கு விதமான பூஜா விதிகளால் ஆராதிக்கப்படுபவள் *

உபாசாரங்களில் வஸ்த்ர சமர்பணம், பூமாலை அல்லது பூக்கள் சமர்ப்பித்தல், தூப தீப ஆராதனைகள் முதலியவை அடக்கம்

() கலா-மயீ - கலைகளை உள்ளடக்கியவள்

#236 சது: ஷஷ்டி கலா-மயீ - அறுபத்தி-நான்கு கலாம்சமாக (கலைகளின் அம்சமாக) வியாபித்திருப்பவள்

() யோகினீ = யோகத்தில் ஈடுபடும் பெண்கள் - யோகத்தின் மூலம் இறைவனின் அருகாமையில் இருப்பவர்கள்
கண = அணிகள் - உப தெய்வங்களின் குழு
யோகினீ கண = உப தெய்வங்கள்
சேவிதா = சேவித்திருத்தல்

#237 மஹா சது: ஷஷ்டி கோடி யோகினீ கண சேவிதா = அறுபத்து நான்கு கோடி உப தேவதைகளால் தொழுதேத்தப்படுபவள்

#238 மனு வித்யா = மனுவினால் முன்னுரைக்கப்பட்ட ஸ்ரீவித்யா உபாசனையின் ஸ்ரீசக்கர வழிபாட்டு வடிவாக திகழ்பவள் *

#239 சந்த்ர வித்யா = சந்திரனால் விவரிக்கப்பட்ட ஸ்ரீ வித்யா உபாசனையின் ஸ்ரீசக்கர வழிபாட்டு முறைகளின் வடிவாக திகழ்பவள் *வித்யா என்றால் ஞானம், அறிவு. ஸ்ரீவித்யா என்பது ஸ்ரீசக்கர வழிபாட்டு முறைகள், அதன் பாரம்பரியம், சம்பிரதாயம் விதிமுறைகள், அனுஷ்டானங்கள் முதலியன. இவ்வழிபாட்டினை மாமுனிகள்,தேவர்கள், கடவுளர்கள் உள்ளிட்ட பனிரெண்டு பேர்  விவரித்திருக்கின்றனர். அவர்கள் மனு, சந்திரன், குபேரன், லோபமுத்ரா, மன்மதன், அகஸ்த்ய மாமுனி, நந்திஷா, சூர்யன், விஷ்ணு, ஸ்கந்தன், ஶிவன் மற்றும் துர்வாஸ மாமுனி ஆகியோர் ஆவர்.


() மண்டலா = ப்ரதேசம் - வட்டாரம் - கண்டம் - வான்வெளி பிரதேசம் - கோள் சுற்று வீதி 

#240 சந்த்ர மண்டல மத்யகா = சந்திர மண்டலத்தின்(கோள் சுற்று வீதி) மத்தியில் வீற்றிருப்பவள்


சந்திரன் மனதை ஆட்சி செய்வதால், மனம் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். மனவோட்டத்தின் இறுதி அடைக்கலாமாக மன ஒருமைப்பாட்டின் உயர்ந்த எண்ணமாக மாயை வென்ற மனத்தில் நடுநாயகியாக அவள் வீற்றுப்பதாக உணரலாம். வேறு சிலர், சந்திர மண்டலத்தை சஹஸ்ராரத்துடன் ஒப்பிட்டு, அதன் மத்திய பகுதியான பிந்துவாக விளங்குகிறாள் என்று உணர்த்துகின்றன்ர்.

(தொடரும்)


Lalitha Sahasranama (233-240)


Saguna UpasanaMaha Kamesha Mahishi;
Maha Tripura Sundari;
Chathu: shastyupachaaaradhya;
chathu: sashti kalaa mayi;
Maha chathu: sashti Koti yogini gaNa sEvitha ;
Manu vidhya;
Chandra Vidhya;
Chandra Mandala Madhyaga;

() Mahishi = Principal Consort - Queen

#233 Maha Kamesha Mahishi = She who is the Queen of MahaKamesha (Shiva)

() Tripura = Pura means city or town. It is possible also to interpret as three tiers or realms of existences, i.w. gross, sutble and casual worlds.


#234 Maha Tripura Sundari = Who is the most beautiful woman in the Three worlds.() Shasti = sixty 
chathu: shashti = sixty four
upachara = to serve - treat - decorations - ornaments 
aaradhya = worship

#235 Chathu: shastyupachaa-aradhya = Who is revered with sixty-four types of pooja rituals *

Upacharas includes symbolic offerings like clothes, flowers, incense etc

() kalaa-mayi = comprised of ART

#236 chathu: sashti kalaa mayi; = Who is permeated in sixty-four types of Art

() Yogini = women who are in union with god, in yoga
GaNa = gang or a group - Troop of demi-gods
Yogini-Gana = Demi-goddesses 
Sevitha = To be served


#237 Maha chathu: sashti Koti yogini-gaNa sEvitha = Who is glorified(served) by 64 crores demigodsses

#238 Manu Vidhya : Who personifies SriVidhya worship of Chakra as elucidated by Manu *

#239 Chandra Vidhya = Who personifies SriVidhya Worship of SriChakra and its tradition as discoursed by Chandradeva *

Vidhya is knowledge. Sri-Vidhya talks about worship, rituals and traditions pertaining to Sri-Chakra. Twelve Gods have expounded their school of thoughts on this subject. Manu and Chandra are two of them. Others include Kubera, Lopamudra, Manmatha, Agasthya, Nandisha, Surya, Vishnu, Skanda, Shiva and Durvasa.

() Mandala = region - zone or sector - orbit

#240 Chandra Mandala Madhyaga = She who seated in the centre of chandra-mandala (the orbit of moon) *


Since chandradeva or planet moon represents the mind and its orbit has impact on mind, it can also be interpreted that,  Devi lalitha is seated as the central 'point of focus' of mind (sans maya). There are other interpretations, relating Chandramandala to Sahasrara and she is being the central focus or the bindhu in sahasrara.


(to be continued)

Thanks reference and credit:

March 10, 2018

ஒரு காதல் வந்துச்சோ ( நகைச்சுவை நாடகம்) (பகுதி 1)


(இடம்: ஏபிசி காலனி. 

மங்களம் காபி ஆற்றிக் கொண்டிருக்கிறாள். சபேசன் வழக்கமாக எல்லா ஆண்களையும் போல் பேப்பரில் மூழ்கியிருக்கிறார். சுசீலா குறுக்க நெடுக்க நகத்தைக் கடித்தபடி நடை பயில்கிறாள்.)

மங்களம்: கொஞ்சம் அந்த பேப்பரை கீழ வச்சுட்டு காதை இங்க குடுக்கறீங்களா?

சபேசன்: காது என்னடி காது. உனக்குத்தான் என் மனசையே குடுத்து மாட்டிட்டு முழுக்கறேனே.

மங்களம்: புல்லரிக்குது போங்க. நான் சொல்றதைக் கொஞ்சம் கவனமா கேளுங்கன்னு சொன்னேன்.

சுசீலா: அப்பா, நானே டென்ஷன்ல இருக்கேன். உங்க ரெண்டு பேருக்கும் என்ன ரொமான்ஸ் வேண்டிகிடக்கு!

மங்களம்: இவ அடிக்கடி குறுக்க நெடுக்க நடக்கறதப் பார்த்தா எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க. பேசாம என் கஸின் பையன் குப்புவுக்கு கல்யாணம் பேசி முடிச்சுடலாம்.

சபேசன்: அதெப்படி குப்புவுக்கு கல்யாணம் ஆனா, இவ நடக்கறத நிறுத்துவா?

மங்களம்(எரிச்சலுடன்): குப்புவை இவளுக்கு பேசி முடிக்கலாம்னு சொன்னேன்.

சுசீலா: ரெண்டு பேரும் கொஞ்சம் பேசாம இருங்க. எனக்கு இருக்கற ப்ராப்ளம் பத்தாதுன்னு நீங்க வேற புதுசா சேக்காதீங்க. ரெண்டாவது எனக்கு இப்போ கல்யாணத்துக்கு அவசியம் இல்லை. பேரே சகிக்கலை. குப்பு சுப்புன்னு. கொஞ்சம் மார்டர்ன் பேரே கிடைக்கலியா.

சபேசன்: சரி வேணா பேரை மாத்திடலாம்மா. பேரா ஒரு ப்ராப்ளம். இல்லை நீயே எதானும் 'ஜிம்மி', 'டாமி' இப்படி யாரையாவது காதலிக்கறேன்னா சொல்லு. 

சுசீலா: காதல் வந்தா கட்டாயம் சொல்றேன்பா. ஆனாலும் உங்க Choice of names ரொம்ப மோசம்.

('ஒரு காதல் வந்திச்சோ... ஒரு காதல் வந்திச்சோ' என்று பாடியபடி வினோத் நுழைகிறான்)

வினோத்: என்ன சண்டை இங்க. சுசீலா மறுபடி அரியர்ஸ் வெச்சுட்டாளா?

சுசீலா: டேய் உனக்கு உடம்பு முழுக்க வெறும் கொழுப்புச்சத்து தான் இருக்கு.

வினோத்: அப்பா ஹாட் ந்யூஸ் பார்த்தீங்களா? 'ரீபாக்' ஷூஸ் பாதி ரேட்டாம். 'லீ ஜீன்ஸ் ரெண்டு வாங்கினா இன்னொண்ணு ·ப்ரீயாம்.

சபேசன்(கடுப்பாக): நான் பேப்பரே படிக்கறதில்லைடா வினோத். அப்படியே படிச்சாலும் நாட்டுக்குத் தேவையில்லாத எகானமி ந்யூஸ் மட்டும் தான் படிப்பேன்.

மங்களம்: ஏங்க நம்ம 'கீதாலயம் சாரீஸ்'ல கூட தள்ளுபடியாங்க. போய் பார்க்கலாமா?
சபேசன்(தப்பி ஓடும் உத்வேகத்துடன்): இந்தக் கடைக்காரங்களுக்கு வேற வேலையில்லை. தடுக்கி விழுந்தா தள்ளுபடி. ஆடித் தள்ளுபடி, பாடி தள்ளுபடி, பொங்கல், தீபாவளி, க்ருஸ்துமஸ், இதைத் தவிர சேல்ஸ் வேற. நான் புதுசா 'லோன்' போட்டாத் தான் உண்டு.

வினோத்: அப்பா, உங்களுக்கு ஒரு பொறுப்பான புள்ள இருக்கான்றத மறந்துட்டு பேசறீங்க. உங்க கஷ்டத்துல பங்கெடுத்துக்கத் தானே நான் தினம் இரண்டு மணி நேரம் குழந்தைங்களுக்கு ட்யூஷன் சொல்லித்தந்து சம்பாதிக்கறேன்.

சபேசன்: டேய் ஓவரா கத விடாதடா. குழந்தைங்களா அதுங்க? நீ எதுக்கு ட்யூஷன் சொல்லித்தரன்னு எனக்கு தெரியாதா.

வினோத்(விரைப்புடன்): சரி... சரீ..... கொஞ்சம் வளர்ந்த கொழந்தைங்க. ஆனாலும் பைசா பைசா தானே.

சபேசன்: என்ன பெரிய பைசா, நீ வாங்கற பைசா, அந்த கொழந்தைங்களோட வளைச்சுபோட விதவிதமா ட்ரெஸ் வாங்கவே உனக்கு சரியாகிடுது.

வினோத்: சேச்சே! நான் அது மாதிரி பண்ணுவேனா? உங்க பையன்பா நானு. 

மங்களம்: அதாண்டா என் கவலையே!

(சபேசன் முறைக்க மங்களம் நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறாள்.)

சுசீலா: யாருக்காச்சும் நான் ஏன் டென்ஷனா நடக்கறேன்னு ஒரு கவலை இருக்கா?

வினோத்: டென்ஷனா ஏன் நடக்கற சுசீ.. வேணா உக்காந்துக்கயேன்!

சுசீலா: எப்படிம்மா இப்படி ஒரு ப்ராணியை எனக்கு அண்ணனா பெத்த..

மங்களம்(வெட்கத்துடன்): ஹி ஹி. எல்லாம் பகவான் செயல்.

வினோத்: என்ன ப்ராணின்னு சொன்ன அற்பப் பூச்சியே! வெறும நடந்துட்டே இருக்காம, அப்டியே இன்னும் டென்ஷன் டெவலப் பண்ணி, ஓடிப் போய்டேன்.

சபேசன்: சுசீம்மா என்னாச்சு, எனிதிங் ராங்.

சுசீலா(ஆவேசத்துடன்): அந்த 'பி' ப்ளாக் ரத்னா என்னை உசுப்பேத்தி விட்டுட்டாப்பா!
வினோத்: யாரு ரத்னா எனக்குத் தெரியாம? சிவப்பா கொஞ்சம் உன்னைவிட அழகா, கொழு கொழுன்னு 'மீரா ஜாஸ்மின்' மாதிரி சிரிப்பாளே அவளா? நல்ல பிள்ளையாச்சே அது.

சுசீலா: அவளே தான். இந்த முறை நம்ம ஃபளாட் தீபாவளி நிகழ்ச்சியில் 'ஏ' ப்ளாக் தனியா 'பி' ப்ளாக் தனியா வேற வேற நாளில் ப்ரொக்ராம் தரணமாம். அவங்க இல்லாம நாம என்ன ப்ராமாதமா கிழிக்கப் போறோம்ன்னு திமிரா பேசறா. நம்ம ப்ளாக் நாங்க சில ஃப்ரெண்ட்ஸ் பல்சுவை நிகழ்ச்சிக்கு ப்ராக்டிஸ் செய்யணும். 

வினோத்: என்னிக்கின்னு சொல்லு சுசீ.... நான் ஊர்ல இல்லாம கழண்டுக்கறேன்.

சுசீலா: நீ என்ன வேணா பண்ணு. ஆனா ஒண்ணே ஒண்ணு புரிஞ்சுக்கோ!

வினோத்: என்ன?

சுசீலா: அந்த ரத்னா ஒண்ணும் என்னை விட அழகு இல்லை!

(எரிச்சலுடன் சுசீலா எழுந்து செல்ல, வினோத் இளிக்கிறான்)

(தொடரும்)

LikeShow More Reactions

February 27, 2018

லலிதா சஹஸ்ரநாமம் (232) (With English Meaning)சகுண உபாசனா

ஹேஷ்வரஹா-கல்பஹா தாண்டவ சாக்ஷிணி = மஹாகல்ப முடிவில் நிகழும் மஹாப்ரளயத்தில்ல் மஹேஷ்வரனின் தாண்டவத்திற்கு சாக்ஷியாக இருப்பவள் *

* ஹிந்துக்களின் கூற்றுப்படி, கால அளவுகள் யுகங்களாக நிர்ணயிக்கபாட்டிருக்கிறது. மஹாகல்பம் என்ற கால அளவு முடிந்த பிறகு, பிரபஞ்சம் தனக்குள் சுருங்குவதும், அடுத்த சிருஷ்டியின் பொழுது விரிவதுமாக சொல்லப்பட்டிருக்கிறது. இவ்விரிவும் சுருக்கமும், ஒரு மனிதனின் வாழ்விலும் தினம் நிகழும் உறக்கம் விழிப்புக்கு சமமாகும்.
உறக்கத்தில் வெளி உலகம் ஒடுங்கி நமக்குள் நிலைக்கிறது. இதையே ப்ரபஞ்ச அடிப்படையில் (macro) சிந்தித்தால் பெரழிவு என்ற மஹாப்ரளையம் பரப்பிரம்மத்தின் ஒடுக்க நிலை.


ஒரு கல்ப காலம் என்பது ப்ரம்மாவின் ஒரு நாள்
ஒரு நாள் பிரம்மாவிற்கு 1000 சதுர் யுகங்கள்
ஒரு சதுர் யுகம் 'சத்திய த்ரேதா துவாபர கலி' என்ற நான்கு  யுகங்களின் கூட்டுச் கணக்கு


பிரம்மாவின் இருப்பும் காலகதிக்கேற்பவே சுழல்கிறது என்பதற்கு இது எடுத்துக்காட்டு. நூறு வருடம் ஆயுள் கொண்ட பிரம்மாவின் ஆயுளும் பிரபஞ்ச பிரமாண்டத்தில் ஒரு நீர்க்குமிழியின் சிறிது காலமாத்திரையில் நின்றுவிடும்.


ஒரு கல்ப காலம் முடியும் பொழுது, மஹாப்ரளையம் நேருகிறது. வேறு சில யுகப் பிரளயங்கள் சிறு அளவில் நிகழ்கின்றன. 'ப்ராக்ருதிக ப்ரளயம எனும் மஹாப்ரளஹததில் நேரம் காலம், ஆகாசம், அனைத்து ரூப ரச தத்துவங்களைத் தவிர கர்மாவும் ஒடுங்கி பிரம்மத்தில் நிலைத்திருப்பதாக கூற்று.


இரு வேறு தத்துவங்கள் இதனையொட்டி கூறப்பட்டுள்ளன. அத்வைத தத்துவத்தின் படி, சிவம் மட்டுமே தனித்து பிரம்மமாக ஒடுங்கியிருக்கும் என்று புரிதல். 

துவைதம், விசிஷ்டாத்வைத தத்துவத்தின் படியும்,  அத்வைத தத்துவத்தின் மற்றொரு கோணத்திலும், பெரும்ப்ரளைய  காலத்தில் அனைத்தும் ஒன்றுபோல் ஒடுங்கி இருக்கும். எனினும் மிக நுண்ணிய சூக்ஷம வடிவில் அடுத்து நிகழும் சிருஷ்டிக்குறிய சாரம் பொதிந்திருக்கும் என்பது கருத்து.


இதனைப் பற்றிய தேடலில் எனக்கு கிடைத்த பொக்கிஷமே லலிதா சஹஸ்ரநாமத்தின் மூலமான பதில். இதில் அம்பாள் என்று வடிவம் தாங்கி நிற்கும் ரூபமற்ற பிரக்ருதி, ப்ரளய ஊழிக் கூத்தில் சிவத்தின் நடனத்திற்கு சாக்ஷியாக இருக்கிறாள் என்று நாமத்தின் பொருள். பரப்பிரம்மத்தின் ஒடுங்கிய நிலையின் சாக்ஷியாக பிரக்ருதி இருக்கிறாள் என்பது தத்துவப் பொருள். 'ஆதியந்தமில்லாத அனாதி கர்மா' என்று சாஸ்திரம் இக்கருத்திற்கு உடன்பட்டிருக்கிறது.


மஹேஷ்வர மஹாகல்ப மஹா பிரளய சாக்ஷிணி....

(தொடர்வோம்)

Lalitha Sahasranama (232)

Saguna Upasana

Maheshwara Maha-Kalpa Maha Thandava Sakshini = She who is the sole-witness of the great dance of Maheshwara during Great deluge or Maha-Pralaya (towards the end of Maha-Kalpa) **


* Hindu scriptures stress upon "periods of time" or eons when creation happen and then dwindle back
in its self (parabrahman) .A human being(micro) is awake during the day and as the dusk sets in, he goes back towards himself into sleep. Then the universe and its dramas nullifies in his mind. Similarly the parabrahman or the totality (macro), creates and keeps the drama of creation for a period of time and then dwindles into itself for equal period of time of 'non-activity', in a state of equilibrium.One Kalpa is 1 day for Brahma
One day for Brahma is 1000 chathur yugas 
One yuga comprises of Sathya, Tretha, Dvapara and Kaliyuga
One chathur yuga is addition of all these 4 yuga cycle


Let us now not ponder upon numbers. We can simply leave it by saying,  Brahma lives trillions of years but,just like how a humanbeing's life rushes by into his oldage and eventually in death, so too Lord Brahma does not live eternally but succumbs to time span.


When one kalpa gets over, then happens The Great-deluge. There are other dissolutions which are minor in nature, which dissolves the lower worlds (according to hindu concepts) but the higher realms of existence is still intact and preserved. However during Great-deluge or Mahapralaya all realms are dissolved leading to complete re-absortion. It is said, time space and form all thathvas are dissolved.


There are theories about creation, after Mahapralaya. As per Hindu philosophy there are different views.

Advaitic point of view holds that, during such Great deluge everything becomes singular and nothing but Shiva remains. Hence Time, space, form and even Karma is annihilated. Hence everything becomes but one with no distinction.


When creation happens, what is the basis of creation (assuming Karma is annihilated ) if all jivas merge into the supreme truth?


However pluralistic sidhdhantha (dwaita or visishtadvaita) hold that, during Great deluge everything is
so close to the supreme truth, that it 'looks or seem' to be singular. However it exist as POTENTIALITIES from which the subsequent creation (manvantara) starts.


These long talks, I thought I would share mainly to enumerate, when I was looking for an explanation about Mahapralaya, I seem to think I found a better answer through Lalitha Sahasranama. Our goddess, maa prakruthi is but WITNESSING the great dance of Shiva. Hence we can assume, She along with Shiva exist (which can be taken as existing as potentialities) . Thus the name. Keeping in mind 'Karma is Anadhi / beginningless', this explanation seem convincing.


Mahesvara MahaKalpa MahaThandava Sakshini ...

(to continue)