July 15, 2006

விடை





இலையோ உண்டோவென இருதலைக்கொள்ளியாய்
உழன்று சிதைந்து உருகி மறுகி
உடைமைகள் உதறி கடமைகள் மறந்து
உருவமும் மாறி பருவமும் தொலைந்தாலும்
உயிர் மட்டும் உனையே மாறாது நினைத்திருக்க
இருதயமும் வலுவிழந்து இறக்கும் முன்பேனும்
இருக்கிறேன் என்றே எனைக்காண வருவாயோ?
இறுதி வரையில் இல்லாமலே போவாயோ!

***

36 comments:

  1. //இறக்கும் முன்பேனும்
    இருக்கிறேன் என்றே எனைக்காண வருவாயோ
    //

    அன்பின் ஷக்தி..
    கவலைப் படாதே.. கண்டிப்பாக வருவேன் !!

    முன்னாள்.. இன்னாள்.. அன்பன்

    ReplyDelete
  2. [b]கடவுளைத் தேடி[/b] விடை காணாமல் எழுதிய கவிதைக்கு...

    கடவுள் மாதிரி பேர் சொல்லாமல் பதில் சொல்லிட்டீங்களோ?

    ReplyDelete
  3. ahaahaa vanththaatchaa????

    sanththOsham

    Mohandoss

    ReplyDelete
  4. நீங்கள் கதை எழுதும் மோஹன்தாஸ் தானே?

    நினைவிருக்கிறதா? நம் கருத்துப்பறிமாற்றங்கள்? :)

    ReplyDelete
  5. illaamalaa prabha.

    enjoyed every one of it.

    Mohan

    ReplyDelete
  6. //இருக்கிறேன் என்றே எனைக்காண வருவாயோ?
    இறுதி வரையில் இல்லாமலே போவாயோ//

    எப்போ வருவார் எப்படி எந்த உருவத்துல வருவாருனு தெரியாது வர வேண்டிய நேரத்துல சரியா வருவார் :)

    ReplyDelete
  7. pls enable comment moderation as well :)

    ReplyDelete
  8. அட.... நம்ம ஷக்தி!

    வாங்க வாங்க எப்படி இருக்கீங்க ஷக்தி?

    எப்ப ஜோதியிலே ஐக்கியமானீங்க?
    இப்பத்தாங்க கவனிச்சேன்.

    சந்தோஷமா இருக்கு ஷக்தி.

    வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  9. எனைத்தேடும் பெண்ணே
    ஊனுறை உடம்பில்
    உள்ளுரை உயிரில்
    நித்தம் கலந்திருக்கும்
    என்னை அறிவாயா

    தினம் நினைத்து
    எனக்கான
    தியானமும் தேடலும்
    எங்கே போய்விடும்

    உள்ளுக்குள்ளே
    உற்றுப் பார்
    ஒய்யாரமாய்
    அதோ ஓரத்தில்
    நீ தேடிக்கொண்டு இருக்கும்
    நான்

    ReplyDelete
  10. கவலை படாதீங்க லேட்டா வந்தாலும் லேட்டஷ்டா வருவார் :-)

    ReplyDelete
  11. aha...ena unga munaal inaal anban ipidi pearilamal vanthidu podaru??

    ReplyDelete
  12. வலைப்பதிவில் மீண்டும் எழுதப் போவதாகச் சொன்னீர்கள். இன்னும் ஆரம்பிக்கவில்லை போலிருக்கிறதே. சரி அட்டெண்டஸ் போட வந்ததற்கு அடையாளமாக இந்தக் கமெண்ட் - பி.கே. சிவகுமார்

    ReplyDelete
  13. என் வலையில் வந்து கிழ் கண்டவாறு ஒரு சங்கேத குறியிடு போட்டுள்ளிர்கள். புரியவில்லை. என் வலையிலும் உங்கள் கருத்துக்கு நன்றி தெரிவித்து போட்டுள்ளேன்
    என்ன என்று சொல்ல முடியுமா?


    :)

    :)

    :)

    ( இதையும் கமெண்ட் ன்னு எடுத்துப்பிங்க என்ற நம்பிக்கையில்... )

    ReplyDelete
  14. //என் வலையில் வந்து கிழ் கண்டவாறு ஒரு சங்கேத குறியிடு போட்டுள்ளிர்கள். புரியவில்லை. என் வலையிலும் உங்கள் கருத்துக்கு நன்றி தெரிவித்து போட்டுள்ளேன்
    என்ன என்று சொல்ல முடியுமா? //

    ரொம்ப ரசித்துப்படித்தேன் என்று "ரசனை" என்ற வார்த்தை சொல்ல முடியாத sensitive topic உங்கள் கதை. அதனால் தான் "ரசித்தேன்" என்று எழுதவில்லை.

    கதையின் கருவில் இருந்த கனம் நன்றாக மனதில் பதிந்தது என்பது தான் நான் சொல்ல வந்தது.

    கடவுள் என்றோ இயற்கை என்றோ நாம் வணங்கும் ஷக்திக்கோ "வந்தா வரட்டும் வராட்டி போகட்டும் போ" என்ற வெறுமை வரட்டு மனநிலை வந்த பின் தான் பெரிதாக அருள் புரிந்து பெருமை பட்டுக்கொள்ளும்.

    (குழந்தையின்மை என்றில்லை இது பலவிஷயங்களுக்கும் பொருந்தும்)

    அதை நினைத்து போட்ட குறியீடு தான் அது :)

    பி.கு: என் வலைப்பதிவை எப்படி கண்டுபிடித்தீர்கள் :shocked:

    வருகைக்கு நன்றி.

    அன்புடன்,
    ஷக்தி

    ReplyDelete
  15. You poems are nice!

    Where are you in Bengalooru?

    ReplyDelete
  16. நன்றி ஷக்தி பிரபா,

    உங்கள் பெயர் டபுள் கிளிக்கினால் உங்கள் வலைக்கு போகிறது.

    Why shocked?
    உங்கள் பெயர் என் மறுமொழியில் mask செய்யப்படவில்லை.It was open.

    ReplyDelete
  17. Welcome and thanks a tonne vinitha :)

    I stay in an apartment in bangalore :D I supp that says more than enough about a masked woman ;)

    ReplyDelete
  18. I keep visiting to South Bangalore.

    ReplyDelete
  19. Oh wow! Thats nice. I stay in south blore only !

    ReplyDelete
  20. வணக்கம் ஷக்திபிரபா.உங்கள் பக்கம் வந்தேன் மூன்று பதிவுகள்தான் மூன்றுமே முதுக்கள்.பூக்களின் அலசல் அருமை.எனக்கும் உங்களைப்போலவே பூக்களைப் பறிக்காமல் பார்த்துக் கொண்டிருக்கவே பிடிக்கும்.நானும் பூக்களை பறிக்காதீர் என்கிற பதிவில் சொல்லியிருக்கிறேன்.கவிதை இரண்டுமே அருமை.இன்னும் எழுதுங்கள்.வருவேன்.

    ReplyDelete
  21. \\இருக்கிறேன் என்றே எனைக்காண வருவாயோ?
    இறுதி வரையில் இல்லாமலே போவாயோ!\\

    superp..

    kathalukku azhge kathiruppathuthaane..

    ReplyDelete
  22. விடை தெரியா கவிதையின் பெயர் விடை
    என்ன விந்தை.

    ரொம்ப நல்ல கவிதை.

    ReplyDelete
  23. I almost feel that I am not me, since I no longer write poems !!!

    I still feel grateful to you for making me feeling lost as it reminds me what I was

    Very nice poem. There is mask all over ...

    ReplyDelete
  24. ஷக்தி பிரபா,
    உங்கள் பூக்கள் பற்றிய பதிவு படித்தேன். நல்லா இருக்கு.

    செண்பகப்பூ இது தி.ஜா.வின் ஒரு சிறுகதை.பூ பற்றி விளக்கமும் வரும்.
    அற்புதமான கதை.

    முக்கியமாக “பவழ மல்லி அல்லது பாரி ஜாதம்” விட்டு விட்டீர்கள். மரத்தில் இருந்தாலும் அழகு உதிர்ந்தாலும் அழ்கு.”குப்” என்று அடிக்கும் மணம்.

    ReplyDelete
  25. Wow, this is a really nice one! உணர்வுபூர்வமாக வலியுடன் கலந்து எழுதி இருக்கிறீர்கள். வரிகள் எல்லாம் அருமை...All the best.

    ReplyDelete
  26. //ஹேமா: பூக்களின் அலசல் அருமை.எனக்கும் உங்களைப்போலவே பூக்களைப் பறிக்காமல் பார்த்துக் கொண்டிருக்கவே பிடிக்கும்.//

    நன்றி ஹேமா முதல் வருகைக்கு. :)

    //logu: superp..

    kathalukku azhge kathiruppathuthaane..//

    நன்றி லோகு :)

    //விடை தெரியா கவிதையின் பெயர் விடை
    என்ன விந்தை.

    ரொம்ப நல்ல கவிதை.//

    நன்றி 'அமிர்தவர்ஷிணி அம்மா' :)

    பி.கு: விடை வினாக்குறியாகவே நின்றுவிட்டது என்பதற்காகத் தான் தலைப்பாக இட்டேன் :D :)))

    ReplyDelete
  27. //sugumar said...
    I almost feel that I am not me, since I no longer write poems !!!

    I still feel grateful to you for making me feeling lost as it reminds me what I was //

    நன்றி சுகுமார். :)


    //Very nice poem. There is mask all over ...
    //

    எல்லோருக்குள்ளும் இன்னொருவர் ஒளிந்திருக்கிறார் என்பது தானே உண்மை :)

    ReplyDelete
  28. //Mathu said...
    Wow, this is a really nice one! உணர்வுபூர்வமாக வலியுடன் கலந்து எழுதி இருக்கிறீர்கள். வரிகள் எல்லாம் அருமை...All the best.//

    நன்றி மது :)

    ReplyDelete
  29. //ஷக்தி பிரபா,
    உங்கள் பூக்கள் பற்றிய பதிவு படித்தேன். நல்லா இருக்கு. //

    நன்றி ரவிஷங்கர் :)

    // செண்பகப்பூ இது தி.ஜா.வின் ஒரு சிறுகதை.பூ பற்றி விளக்கமும் வரும்.
    அற்புதமான கதை. //


    நான் படித்த ஒரே தமிழ் நாவல் (புத்தகம்) பொன்னியின் செல்வன் தான் :( வெட்கமாக இருக்கிறது இப்படி சொல்லிக்கொள்ள.

    வாய்ப்பு கிடைத்தால் படிப்பேன் என்று சொல்லியே 3 வருடங்கள் ஓட்டிவிட்டேன்.

    //முக்கியமாக “பவழ மல்லி அல்லது பாரி ஜாதம்” விட்டு விட்டீர்கள். மரத்தில் இருந்தாலும் அழகு உதிர்ந்தாலும் அழ்கு.”குப்” என்று அடிக்கும் மணம். //


    மகிழம்பூவும் பவழமல்லியும் ஒன்று என்று நினைத்துத் தான் ஆரஞ்சு காம்புடன் கூடிய பூ தவறாய் பதிவிட்டு விட்டேன் :confused:

    ReplyDelete
  30. //
    எல்லோருக்குள்ளும் இன்னொருவர் ஒளிந்திருக்கிறார் என்பது தானே உண்மை :)
    //

    எல்லோருக்குள்ளும் இன்னும் சிலர்... என்றுகூட சொல்லலாம்.
    தொடர்ந்து நிறைய எழுதுங்கள்

    ReplyDelete
  31. பூக்களை பற்றிய பதிவு எங்கே இருக்கு?

    ReplyDelete
  32. This comment has been removed by the author.

    ReplyDelete
  33. நன்றி சுகுமார்.

    பூக்களைப் பற்றிய பதிவு இதோ இங்கே.

    http://minminipoochchigal.blogspot.com/2006/07/01.html

    "இதையெல்லாம் படிச்சீங்களா" ன்னு இடப்பக்கம் ஒரு தலைப்பு இருக்கிறது. அதன் கீழ் இதுவரை வலைப்பதிவில் எழுதிய (மூன்றே முன்று தான்!) மூன்றும் உள்ளது. (பூக்கள் பற்றிய பதிவு உட்பட)

    நன்றி.

    ReplyDelete
  34. விடை கிடைக்கும் எனும் நம்பிக்கையில் பல கவிதைகள் விதைக்கப்படுகின்றன. விடை கிடைக்கிறதோ இல்லையோ விடை தேடும் காரணத்துக்கான ஆறுதல்கள் மனிதர்களால் நிச்சயம் தரப்படுகின்றன.

    அருமையான கவிதை ஷக்தி.

    ReplyDelete
  35. வணக்கம் ராதாக்ருஷ்ணன். கடந்த ஓரிரு நாட்களில் என் பதிவுகள் சிலவற்றைப் படித்து தொடர்ந்து பின்னூட்டமும் இட்டிருக்கிறீர்கள். மிக்க நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

    அன்புடன்,
    ஷக்தி.

    ReplyDelete