January 19, 2010

சித்தி (sidhdhi) - (சோவின் எங்கே பிராமணன் - பாகம் 2)


சித்தர்களைப் பற்றியும் அவர்களின் விசேஷ சித்திகளைப் பற்றியும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்। அஷ்டமா(மஹா) சித்திகள் வரப் பெற்றவர்கள். (யோக சித்திகள் எட்டு என ஹிந்து மதம் அறிவிக்கிறது) இறையை அறியும் தேடலில் சித்தி முதலில் கிடைக்கப் பெறும் என்று கூறுவர். பிறப்பின் உயர்ந்த நோக்கத்தில் இறையின் தேடலில் ஈடுபடும் ஒருவன் தனது பாதையில் சித்தியிலே நின்றுவிடாது ஞானத்தை நோக்கி மேல் செல்ல வேண்டும். யோக சித்திகள் கிட்டியவுடன் நிறைவு பெற்றுவிட்டால் அவனின் பரிபூரணத்துவம் நிறைவு பெறுவதில்லை. சித்திகள் கர்வத்தை வளர்த்து விடக் கூடும் சாத்தியம் உண்டு. சித்திகள் வரப் பெற்றதும் அதிலேயே தம் தேடலை நிறுத்தி விடாமல், ஞானத்தை நோக்கி உயர்வதே சிறந்தது.

பரிபூர்ணத்துவம் பெற்ற நிலையில் சித்திகளை மனித குலம் உய்விப்பதற்காக உபயோகித்து, பிறப்பின் நோக்கம் உணர்த்திய சித்தர்களும் பலர். பதினெண்சித்தர்கள் எனப் போற்றப்படுபவர்களில் சிவவாக்கியரும் ஒருவர். சித்தர்களில் தலை சிறந்தவராக கருதப்படுகிறார். உயிரற்ற உருவ வழிபாடுட்டு முறை, மூட நம்பிக்கை பலவற்றையும் இவர் தமது பாடல்களில் சாடியுள்ளார். அகத்தே தேடலைத் தொடராத, இயந்திரத்தனமான சமய வழிபாடுகளைப் பற்றி பாடல்களில் பாடியுள்ளார்.

நாலுவேதம் ஓதுவீர் ஞானப்பாதம் அறிகிலீர்!
பாலுள் நெய்கலந்தவாறு பாவிகாள் அறிகிலீர்!
ஆலமுண்ட கண்டனார் அகத்துள்ளே இருக்கவே...
காலனென்று சொல்லுவீர் கனாவிலும் அஃதில்லையே!


வேதம் ஓதினாலும் நீங்கள் இறைவனை அறிதானில்லை, பாலுள் நெய்யைப் போன்று உம்முள் உரையும் அவனை நீங்கள் அறிந்தானில்லை என்ற கருத்து படி உயர்ந்த தத்துவத்தை உரைக்கும் பாடல்கள். இவர் ஆத்திகரா அல்லது நாத்திகவாதத்தை முன் மொழிந்தவரா என என்று இன்று வரை சர்ச்சைகள் தொடர்ந்தவண்ணம் உள்ளன.

நட்ட கல்லை தெய்வம் என்று
நாலு புஷ்பம் சாத்தியே
சுற்றிவந்து மொணமொணன்று சொல்லும் மந்திரம் ஏதடா!
நட்ட கல்லும் பேசுமோ..நாதன் உள்ளிருக்கையில்!
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ!

என்ற பாடலில் இறைவனை உன்னுள் தேடு என்ற உயர்ந்த தத்துவம் உணர்த்த முயன்றுள்ளார். அதனால் இவர் இறைவனை மறுத்தாரில்லை என்பது தெளிவாகிறது. உணவை சமைக்கும் பாத்திரமும் சட்டுவமுமா சுவை அறியும்? கல்லை கடவுளென்று நம்பும் அறிவீனனே அவன் உன்னுள்ளல்லவா இருக்கிறான்? என்கிறார். "அஹம் பிரமாஸ்மி" என்ற உபநிடத தத்துவத்தின் எளிய சாராம்சம்.

5 comments:

  1. ம்ம்.. சரிங்க

    ReplyDelete
  2. //இவர் ஆத்திகரா அல்லது நாத்திகவாதத்தை முன் மொழிந்தவரா என என்று இன்று வரை சர்ச்சைகள் தொடர்ந்தவண்ணம் உள்ளன.//

    சித்தர்கள் எஞ்ஞான்றும் இறைமறுப்பு கொள்கை கொண்டவர்கள் இல்லை யென்றே அறிகின்றோம். இறைவனை இடையறாது நெஞ்சத்தில் ஏற்றி, அந்த இறைவனே தம்முள் இருப்பதைக் கண்டு கொண்டு, பல சித்திகளைக் கைவரப் பெற்றவர்கள் இவர்கள் என்று தெரியவருகிறது.

    'வெறும் உருவ வழிபாடு மட்டும் போதும்-- அதுவே இறைவனைக் கொண்டாடுவதற்கான இறுதி நிலை'--என்று அத்துடன் தங்கள் இறை நம்பிக்கையை மூட்டை கட்டிக் கொண்டு முடித்துக் கொண்டவர்கள் மத்தியில், அதைத் தாண்டிய நிலைகளை எடுத்துரைத்து, எல்லோருள்ளும் இறைவன் உள்ளான் என்று இறைவனை ஜனரஞ்சகப்படுத்தி இறைவனை நம்முள் காணலாம் என்று பிரகடனப்படுத்தியவர்கள் இவர்கள்.
    இந்நிலையைக் கொஞ்சம் ஆழப் பார்த்தால் இறை நம்பிக்கையில் ஒருகாலத்தில் அவர்கள் செய்த புரட்சி தெரியும்.

    "பாலுள் நெய்கலந்தவாறு பாவிகாள் அறிகிலீர்!
    ஆலமுண்ட கண்டனார் அகத்துள்ளே இருக்கவே..."

    'பாலுள் நெய்யைப் போன்று உம்முள் உரையும் அவனை நீங்கள் அறிந்தானில்லை என்ற கருத்து படி உயர்ந்த தத்துவத்தை உரைக்கும் பாடல்கள்' என்று நீங்களே சொல்லியிருப்பது படி, சித்தர்களின் சிந்தாந்தங்கள் ஆழ நோக்கத்தகுந்தது.
    அவர்கள் சந்தப் புலமையோடு தமிழ்ப் பாடல்கள் இயற்றும் தனித்திறமையும் பெற்றிருந்தார்கள் என்பது கூடுதல் சிறப்பு.

    ReplyDelete
  3. nandri ashok :)

    jeevi,

    miga azhagaaga solliyirukkireergaL. nandri :)

    ReplyDelete
  4. //என்ற பாடலில் இறைவனை உன்னுள் தேடு என்ற உயர்ந்த தத்துவம் உணர்த்த முயன்றுள்ளார். அதனால் இவர் இறைவனை மறுத்தாரில்லை என்பது தெளிவாகிறது.//

    காவி கட்டிக் கொண்டு நாத்திகம் பேசினால் அது ஆத்திகம் ஆகிவிடும்.
    :)

    ReplyDelete
  5. //காவி கட்டிக் கொண்டு நாத்திகம் பேசினால் அது ஆத்திகம் ஆகிவிடும்.
    :)//

    போட்டுக்குள்ளும் சட்டையில் அல்லது காவியிலா நாத்திகமும் ஆத்திகமும் இருக்கிறது???? :)


    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோவி.கண்ணன் :)

    ReplyDelete