September 17, 2017

Lalitha Sahasra Nama-Dhyana shloka 3

Lalitha Sahasra Nama-Dhyana shloka 3



(த்யான ஸ்லோகம்-3 பாடியவர் பற்றிய தகவல்கள் இல்லை)

த்யாயேத் பத்மாசனஸ்தாம்; விகசித வதனாம்; பத்மபத்ராயதாக்ஷீம்; ஹேமாபாம்; பீதவஸ்த்ராம்; கரகலித-லசத் ஹேம பத்மாம்; வராங்கீம்; சர்வாலங்கார யுக்தாம்; சததம் அபயதாம்; பக்த நம்ராம்; பவானீம்; ஸ்ரீவித்யாம்; ஷாந்தமூர்த்திம்; சகல சுரனுதாம்; சர்வ சம்பத் ப்ரதாத்ரீம்

**
பத்மாசனஸ்தாம் = தாமரையில் வீற்றிருப்பவள்
விகசித வதனாம் = ஒளிரும் வதனம்
பத்ம பத்ராய = தாமரை இதழ்கள்
அக்ஷீ = கண்கள்
ஹேமாபாம் = பொன்னென ஜொலிப்பவள் (ஹேம= தங்கம்)
பீத வஸ்த்ராம் = பிரகாசிக்கும் ஆடை தரித்தவள்
கரகலித = கைகளில்
லசத் = மின்னும்
ஹேம பத்மாம் = தங்கத் தாமரை
வராங்கீம் = வரபூஷணி - வரங்களின் வடிவமாகவே இருப்பவள்.
சர்வ = சகலவித
அலங்கார யுக்தாம் = ஆபரண அலங்காரத்துடன் பூரித்திருப்பவள்.
சத்தம் = எப்பொழுதும்
அபயதாம் = பாதுபாப்பு அளிப்பவள்
பக்த நம்ராம் = பக்தர்களுக்கு இரங்கி செவிசாய்ப்பவள்
ஸ்ரீ வித்யாம் = வித்யையின் ரூபிணி. ஞானத்தின் இருப்பிடம்
ஷாந்த மூர்த்திம் = அமைதியின் ரூபம்
சுர-(அ)னுதாம் = சுரர்களால் எனப்படும் தேவர்களால் (தெய்வங்கள்) வணங்கப்படுபவள்
சர்வ = அனைத்து விதமான
சம்பத் ப்ரதாத்ரீம் = செழிப்பும் வளமையும் தந்தருள்பவள்
த்யாயேத் பவானீம் = பவானியை தியானிக்கிறேன்.
**

( ரூபத் தியானம்)

பத்மத்தில் வீற்றிருப்பவளும், ஒளிரும் திங்களென முகமுடையாளும், தாமரை இதழ்களையொத்த கண்களைக் கொண்டவளும், பொன்னென ஜொலிப்பவளும், பிராகாசிக்கும் பட்டாடை தரித்தவளும், கைகளில் மிளிரும் தங்கத் தாமரையை பிடித்திருப்பவளும், சகலவித ஆபரண அலங்காரத்துடன் பூரித்திருப்பவளுமான பவானியை தியானிக்கிறென்.

(பவானியின் குணங்கள்)

எப்பொழுதும் பக்தர்களுக்கும் அபய கரம் நீட்டுபவளும், அவர்கள் கோரிக்கைகளுக்கு இரங்கி செவிசாய்ப்பவளுமான பவானியை தியானிக்கிறேன்.

(அன்னையின் அம்சங்கள்)

ஞானமாகியவளே, வரங்களையே வடிவமாக்கிக் கொண்டவளே, அமைதியின் ரூபமானவளே, சுரர்கள் எனப்படும் ஏனைய தேவதைகளால்வ ணங்கப்படுபவளே, செழிப்பும் செல்வமும் வழங்குபவளே அன்னை பவானியே உன்னை நான் தியானிக்கிறேன்.

**

குறிப்புகள்: சம்பத்து என்பது இவ்வுலக பொருள் சார்ந்த விஷயமாக மட்டும் கொள்ளக்கூடாது. செழிப்பு செல்வம் என்பன, மன அமைதி, அறிவு, பண்பு, ஞானம், வைராக்கியம், பக்தி போன்ற கண்ணுக்கு புலப்படாத சூக்ஷ்ம செல்வத்தையும் குறிக்கும்.

பீத வஸ்த்ரம் போன்ற பட்டாடை தரிப்பதும், பொன்னென ஒளிர்வதும், தங்கத்தாமரையை ஏந்தியிருப்பதும் பணமோ பகட்டையோ குறிப்பிடுபவை அல்ல. அழுக்குகள் அற்ற பூரண பரமாத்மா எப்படி ஒளிருமோ, அப்படி ஒளிர்கிறாள். ஜோதி வடிவமாக இருக்கும் பரமாத்மா என்பதால் மிளிர்கிறாள்.

__

Lalitha Sahasranama dhyana verse 3
(Origin of dhyana verse 3 is unknown)

**

Dyayeth padmasanasthaam; vikasitha vadanaam;
padma pathrayathaaksheem;
Hemabham; peethavasthraam;
karakalitha-lasad hema padmam; varangeem;
Sarvalangara yuktham; sathatham abhayadam;
bhaktha namram; bhavaneem;
Srividyam; santhamurthim;
sakala suranuthaam; sarva sampat pradhatreem

**

Dyayeth = Meditate
padmasanastham = One who sits on lotus
Vikasitha vathanaam = face beaming with smile
padma badhaaya = lotus petals
akshim = eyes
Hemabam = shines like gold
peetha vasthraam = clothed in yellow sheen
karakalitha = in her hand (holding)
lasad = bright beaming
hema padmaam = golden lotus
varaangim = embodiment i.e. bestower of boons
sarva-alankara-yuktham = dressed exquisitely/skillfully
sathatham = always - eternal
abhayatham = protector
bhaktha namraam = attentive to the devotees
sri vidhyam = essence / symbol of "Knowledge"
shantha murthim = personification of peace
sakala sura nutham = worshipped by all gods(evolved beings)
sarva sampath pradhatrim = bestower of every wealth (including wisdom)

**

(meditating on her form)
I meditate on Bhavani, who is seated on lotus with a beaming smile. Whose eyes are like lotus petals. Bhavani who is clothed in silky golden sheen, who herself radiates like gold, Who is so exquisitely dressed, holding a glittering golden lotus in her hand.
(meditating on qualities)
I meditate on bhavani, who eternally plays the role of 'protector', who inclines to be attentive/listen to the needs of devotees
(meditating on her aspects )
I Mediate on her who is worshipped by all suras (gods), who is the essence of all 'knowledge', who is the embodiment of boons, personification of peace and she who grants every kind of wealth.

**
Note:
Wealth as referred here, should not be understood only to mean materialistic riches as we know. Peace, knowledge, wisdom, experience and other such innumerable-intangible wealth are inclusive.
Her shine should not be mistook as the shine of riches as we know. Since she is personified as truth or parabrahman, she is glowing with purity.
_
Thanks: Reference Credit:

http://www.sanskritdictionary.com


No comments:

Post a Comment