September 19, 2017

Lalitha Sahasranama - (6 - 9)

Lalitha Sahasranama 6 - 9


**

udyadh bhanu sahasraabhaa; chathur baahu samanvitha;
raaga swaroopa bhashatya; krodhakarangu sojwala


**

() Udhyadh bhanu=rising sun 
sahasra=thousand 
aabhaa=brilliance, shine light.


# udhyath banu sahasrabha = Glitters like thousand rising sun

() chathur baahu=Four arms 
samanvith=associated / possessing


# Chathur baahu samanvitha = possessing four arms, four - armed

() Raaga=desires 
Raaga swaroopa=in the form of desires 
paashadya=rope


# Raaga Swaroopa Paashadya = One who holds pasha, i.e. rope personifiying desires which prompts creation. * PS 1

() krOdhaakar=anger 
angush=as angusa / symbolism to mean control 
jwala=jyothirmayi, glistening like light


# KrodhaakarangusOjwala = She who shines with angusha depicting anger which represents her control over creation. *PS 2

**

* PS 1 : Desire is the root cause for creation and reason for million life forms. She symbolically holds desire in the form of rope to mean desire is the root cause of creation. She thereby induces life particles to assume its role and play its part.
There is another perspective. She has a hold on desires of lifeforms and hence can lift devotees out of rope called desire and pave way for upliftment or liberation.
* PS 2 : Similarly there are different perspectives to understand her symbolising angusha. It may mean to have control over life-forms. It can also mean she, uses anger as a weapon to control when adharma or unrighteousness prevails.
( to continue )
___
லலிதா சஹஸ்ர நாமம் 6 - 9

**

உத்யத்பானு சஹஸ்ராபா ; சதுர்பாஹு சமன்விதா;
ராகஸ்வரூப பாஷாட்யா ; க்ரோதாகாரங்க்குசோஜ்வலா;


( tha-dha, sha-sa, pa-bha போன்ற வித்தியாசங்களுக்கு
மேலே ஆங்கிலத்தில் எழுதியிருப்பதை சரி பார்த்துக்கொள்ளவும். )


() உத்யத் பானு = உதய சூரியன் 
சஹஸ்ர = ஆயிரம் 
ஆபா = பிரகாசம்


# உத்யத்பானு சஹஸ்ராபா = ஆயிரம் உதய சூரியனின் பிரகாசத்துடன் பிரகாசிப்பவள்

() சமன்விதா = இருப்பவள் / உடையவள் 
பாஹு = கைகள் 
சதுர் = நான்கு

# சதுர் பாஹு சமன்விதா = நான்கு கைகளை உடையவள்

() ராக ஸ்வரூபா = ராகம் என்றால் ஆசைகள், அபிலாஷைகள் 
பாஷாட்யா = பாசம் என்னும் கயிறு


# ராக ஸ்வரூப பாஷாட்யா = ஆசைகள் என்ற கயிற்றை முன் நிறுத்தி பிரபஞ்சத்தை இயக்குபவள் *குறிப்பு1

() க்ரோதாகார = ஆக்ரோஷம், கோபம் கோண்டு 
அங்குச = அங்குசம் என்ற ஆயுதத்தை க்ரோதத்தின் வெளிப்பாடாக 
சுமந்திருக்கிறாள் 
உஜ்வலா = பிரகாசிப்பவள்


# க்ரோதாகாராங்குசோஜ்வலா = க்ரோதத்தை வெளிப்படுத்தும் அங்குசத்தை தாங்கியபடி ஜொலிக்கிறாள் *குறிப்பு 2

**

குறிப்பு 1 : ராகமாகிய ஆசைகளே பிறப்புக்குக் காரணம். அதனை கயிறாக கொண்டு பிரபஞ்சத்தை அவரவர் வினைப்படி தோற்றுவிக்கிறாள் என்பது புரிதல்.
மற்றொரு பார்வையில், கருணையின் காரணமாக, அன்னையானவள், ஆசைகளின் வேரை அறுத்து வீடு-பேறு என்னும் முக்திக்கு வழி செய்பவள் என்றும் புரிந்து கொள்ளப்படுகிறது.

குறிப்பு 2 : சினத்தின் வெளிப்பாடு ஒடுக்கத்தின் ஆரம்பமாகவோ, அல்லது அதர்மத்தை அழிக்க அவள் கொண்டுள்ள உக்கிர ரூபமாகவும் பொருள் சொல்லப்படுகிறது.
சினத்தின் பிரதிபலிப்பு சேதன அசேதன பொருட்களை அவள் ஆளுமை செய்வதற்கான அடையாளம் என்பது இன்னொரு பார்வை.

(மேலும் பார்க்கலாம்)

Thanks and Reference Credit:

1 comment:

  1. பக்த வாசகர்கள் வாசித்து பயன்பெறலாம்

    ReplyDelete