January 27, 2018

லலிதா சஹஸ்ரநாமம் (176 - 184) (with English meanings)






நிர்குண உபாசனை

நிர்விகல்பா;

நிராபாதா;
நிராபேதா;
நிர்பேதா;
பேதநாசினி;
நிர்-நாசா;
ம்ருத்யு மதனீ;
நிஷ்க்ரியா;
நிஷ்பரிக்ரஹா;
நி:ஸ்துலா;


() விகல்பா = இல்லாத ஒன்றின் கற்பனை, உதாரணம் 'கானல் நீர்' --- தவறான புரிதல் ---- தேர்வு செய்தல்

# 176 நிர்விகல்பா = நகல் / பிரதிபிம்பங்களின் பொய்மைக்கு ஆட்படாதவள்

( நாம ரூப வடிவங்களின் பேதம் பிரதிபிம்பங்கள் என்ற கருத்துக்கு உட்படுகிறது. உண்மையின் தத்துவம் பரப்பிரம்மம் மட்டுமே, அந்த உண்மையாக அவள் இருக்கிறாள் என்று பொருள் பண்ணிக்கொள்ளலாம்)

() ஆபாதா = துன்பம் - இடர் - இடையூறு

# 177 நிராபாதா = இடர்களால் நிலைகுலையாதவள்

() பேதா = பேதம் - வேறுபாடு

# 178 நிர்பேதா = எவ்வித வேறுபாடும் அற்றவள் - (சேதன - அசேதனத்தின் ஐக்கியமாக உணரப்படுபவள் )

# 179 பேதநாசினி = பேதங்களையும் அதனால் விளையும் வேற்றுமைகளையும் ஒழிப்பவள் (பேதங்கள் அஞ்ஞானத்தால் தோன்றுபவை)


# 180 நிர்நாசா = அழிவுக்கு அப்பாற்பட்டவள் ( அமரத்துவம் வாய்ந்தவள் )

() மதன = வீழ்த்துதல்

() ம்ருத்யு = மரணம் = முடிவு

# 181 ம்ருத்யுமதனீ = பிறப்பு-இறப்பு என்ற சுழற்சியை தகர்ப்பவள்

() க்ரியா = செயல் = கர்மா

# 182 நிஷ்க்ரியா = செயல் நிமித்த கர்மங்களுக்கு அப்பாற்பட்டு திகழ்பவள்
(கர்மங்களாலான வினைகளால் தீண்டப்படாதவள்)

() பரிக்ரஹா = ஆதரவு - சகாயம் - பெறப்படுவது

# 183 நிஷ்பரிக்ரஹா - தேவைகள் அற்றவள் - எதனையும் சாராமல் விளங்குபவள்.

() துலா = தராசு = அளக்கப்படுவது = பொருத்திப்பார்ப்பது

# 184 நி:ஸ்துலா = ஈடு இணையற்றவள்

( தொடர்வோம் )

Lalitha Sahasranama (176 - 184 )


NirguNa upaasana

Nirvikalpa;

Nir-abhadha;
Nir-bhedha;
BhedhaNasini;
NirNasa;
Mrithyu Mathani;
NishKriya;
NishParigraha;
NihSthula;


() vikalpa = false notions - fancy imaginations = choice or alternative

# 176 NirVikalpa = Who is without false identifications

( * False identifications would mean false names, forms and identity, She is without such
false dreams, which otherwise means she is the ultimate truth or formless brahmam )


() Abhaadha = distressed - tormented

# 177 NirAbhaadha = She who is undisturbed i.e. composed - tranquil

() BhEdha = division - difference

# 178 NirBhedha = Who is devoid of every perception of difference.. i.e the unified force ...

# 179 BhedhaNasini = Who erases and eliminates the differences born out of ignorance or Agnaana

# 180 NirNaasa = Who is indestructible (therefore immortal)

() Mathana = to destroy
() Mruthyu = to terminate

# 181 MruthyuMathani = Who destroys mortality ( thereby grants liberation from birth and death)

() Kriya = activity - work - karma

# 182 NishKriya = Who is does not associate with action or Karma ( * state of being a witness , beyond karmic stains )

() Parigraha = assistance - acquisition - receiving or accepting anything

# 183 NishParigraha = Who expects or wants nothing (she is complete in herself)

() thula = weigh - compare

# 184 NihSthula = Who is incomparable...i.e. peerless.

(to continue)

No comments:

Post a Comment